திரு குழந்தைவேல் கணபதிப்பிள்ளை
மட்டக்களப்பு வெல்லாவெளியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேல் கணபதிப்பிள்ளை அவர்கள் 29-06-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குழந்தைவேல், மாணிக்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, இராசரெட்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெகனாவதியின் பாசமிகு கணவரும்,
நித்தியானந்தன்(கனடா), மேகவண்ணன், பிரசாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவலிங்கம், ஞானமுத்து, வைகாலிபொடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீர்த்திகா(கனடா), இஸ்தகிரி, பாபு(வெல்டர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பத்மாவதி, இராமநாதன், ஜெகநாதன், புவனேஸ்வரி, பேரின்பராஜா, காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருஷன், அபிஷ்னன்(கனடா), டிலுசன், ஹிரோசி, கவிலாஷ், திகாஷ், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அன்புவழிபுரம் பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி :
இல. 284/1, அன்புவழிபுரம்,
திருகோணமலை.
தகவல்
குடும்பத்தினர்