மரண அறிவித்தல்
திரு சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரட் (பாலசிங்கம்)
யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரட் (பாலசிங்கம்) அவர்கள் (20.03.2016) ஞாயிறு அன்று அல்லைப்பிட்டியில் இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான, சந்தியாப்பிள்ளை-பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிலிப்பையா மற்றும் விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகனுமாவார்.
லூட்ஸ்மேரியின் (செல்வம்) அன்புக் கணவரும், ஜெயறூபன் (நில அளவைத் திணைக்களம் வந்தாறுமூலை) கெஸ்மின் கார்மேலா (பிரதேச செயலகம்-ஊர்காவற்றுறை), ஜெனற் காமலிற்றா (கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
காலஞ்சென்ற அன்ரன் மரியநாயகம் (துரைசிங்கம்), டொமிக் அல்பிறட் (யோகம்), அமலேஸ்வரி (சித்திரா-ஆசிரியர் நல்லூர் சென் பெனடிக் பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஆதித்தனின் பாசமிகு மாமனாருமாவார்.
தவமலர், திரேசா, தேவதாசன், காலஞ்சென்ற, நீற்ரா புஸ்பராணி மற்றும் சகாயராசன் (கனடா) கெமி எம் லூயிஸ் (கனடா), அன்ரோனியா டெய்சி-மேரி ஜெசிந்தா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கபிஷனாவின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடன் (21.03.2016) திங்கட்கிழமை இன்று பிற்பகல் 2 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 3.00 மணிக்கு அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் திருப்பலி கொடுக்கப்பட்டு அல்லைப்பிட்டி பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்