மரண அறிவித்தல்
திரு.சவரிமுத்து மரிய ஆரோகணம்(குணம்) (ஓய்வு பெற்ற சுங்க இலாக உத்தியோகத்தர்)
மரண அறிவித்தல்
திரு.சவரிமுத்து மரிய ஆரோகணம்(குணம்) (ஓய்வு பெற்ற சுங்க இலாக உத்தியோகத்தர்)
ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை பாலையூற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சவரிமுத்து மரிய ஆரோகணம்(குணம்) (ஓய்வு பெற்ற சுங்க இலாக உத்தியோகத்தர்) அவர்கள் 2016.02.03 புதன் கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சவரிமுத்து திரேசம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற நகோமியின் அன்புக் கணவரும், வெஸ்லி ரஞ்சித்தின் பாசமிகு தந்தையும், யேமனி (கனடா), மேரி ஜோசப் கீறீஸ்ரியன் , ஜோர்ஜ் சவுந்திரன் ஆகியோரின் சகோதரரும், டயனாவின் (தி/சென் மேரிஸ் கல்லூரி), மாமனாரும், டேரியஸ் நோஷனின் அப்பப்பாவும், எமில், பசில், சிசில்(வீரகேசரி), டெனில், துஷியந்தி, கிரிசாந், சினேஸ்காந், சுகிதா(கனடா), அருட்சகோதரி தொசானி (சோபிகா-புனித அன்னைத் தெரேசா கன்னியர் மடம்) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு அன்னாரது இல்லத்திலிருந்து பாலையூற்று புனித லுத்து மாதா ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலியின் பின்னர் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்-குடும்பத்தினர்
1219,தேவாலய வீதி, பாலையூற்று
026 2220002