மரண அறிவித்தல்
திரு சுரேந்திரன் நிரூஜன்
பறாளை சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் இல.151 நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுரேந்திரன் நிரூஜன் (ஸ்ரீ லங்கா ரெலிகொம் – வவுனியா தொழில் நுட்ப உதவியாளர்) (25.01.2016) திங்கட்கிழமை விநாயகப் பெருமானின் பாதார விந்தங்களை சென்றடைந்தார்.
அன்னார் சீனியர் ஒழுங்கை கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி துரையப்பா ஐயா, பறாளை சுழிபுரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிர்காமநாதன் ஐயா ஆகியோரின் அன்புப் பேரனும் து.சுரேந்திரன் (ஓய்வு நிலை மேல் நீதிமன்ற பதிவாளர்) – பத்மரஜனி (பாப்பா) தம்பதியரின் அன்பு மகனுமாவார்.
சங்கீதா (கனடா), கஜரூபன் (பொறியியலாளர்), செந்தூரன் (பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், கோயூரநாதனின் (கனடா) அன்பு மைத்துனரும், சூடனின் (கனடா) ஆசை பெரிய மாமாவும், காலஞ்சென்ற கோமளாம்பிகையின் மருமகனும், காலஞ்சென்ற து.வைத்திலிங்கம் மற்றும் து.மகாதேவன், து.சிவபாலன், து.விவேகானந்தக்குருக்கள் ஆகியோரின் பெறாமகனுமாவார்.
திரு.திருமதி குகமூர்த்தி, பாலச்சந்திரன் (கனடா), விமலச்சந்திரன் (லண்டன்), காலஞ்சென்ற விஜயச்சந்திரன் (கொலண்ட்) ஆகியோரின் அன்பு மருமகனும் திரு. திருமதி பாண்டுரங்கனின் (கனடா) பெறாமகனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (29.01.2016) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 10.00 மணிக்க பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.