மரண அறிவித்தல்
திரு சுவாமிநாதர் சிவபாதசுந்தரம் (முன்னாள் பிரதம முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவு சங்கம், வவுனியா)
யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் சிவபாதசுந்தரம் அவர்கள் (17-05-2016) செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேந்திரன்(சுரேன், சுரேஷ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, இராஜநாதன், புவனேஸ்வரி, மற்றும் தங்கராஜா (லண்டன்), மகேஸ்வரன் (கனடா), விமலேஸ்வரி (சாவகச்சேரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஸ்வரி (வசந்தா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம் (முன்னாள் பொது முகாமையாளர்- பல நோக்கு கூட்டுறவு சங்கம், கொடிகாமம்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் கனடா