மரண அறிவித்தல்

திரு செல்லையா தர்மலிங்கம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடி, கரவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா தர்மலிங்கம் (22.05.2016) காலமாகிவிட்டார்.

காலஞ்சென்ற D.r செல்லையா அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஓவசியர் சபாரத்தினம் சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனுமாவார்.

லீலாவதியின் அன்புக் கணவருமாவார்.

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (லண்டன்), யோகமலர் நடராஜா (இலங்கை), உருத்திரலிங்கம் (உகண்டா), மற்றும் தியாகலிங்கம் (இந்தியா), திருமதி வேதநாயகமலர் தில்லைநாதன், திருமதி சாந்தமலர் ஆனந்தராசா, திருமதி சோதிமலர் மனுவேல் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார்.

அன்னார் இறப்பதற்கு முன்னதாக எழுதி வைத்த மரண சாதனத்தின் அடிப்படையில் பூதவுடல் யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செய்தி இணைப்பு:

மரணசாதனத்தின் மூலம் அமரர் தர்மலிங்கத்தின் உடல் யாழ் மருத்துவபீடத்திடம் ஒப்படைப்பு (Photos)

நிகழ்வுகள்
மருத்துவபீடத்திடம் ஒப்படைப்பு
திகதி : 22.05.2016 ஞாயிற்றுக்கிழமை
இடம் : யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 226 4269