மரண அறிவித்தல்

திரு செல்லையா யோகராசா

சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா யோகராசா (ஓய்வுபெற்ற பிரதி அதிபர்) நேற்று (04.07.2016) திங்கட்கிழமை காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா – செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும், சுப்பையா – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், அம்பிகாதேவியின் (ஓய்வு பெற்ற ஆசிரியை) அன்புக் கணவருமாவார்.

ஆதித்தனின் (Cey bank Regional Central, Jaffna) அன்புத் தந்தையும், காலஞ்சென்ற செல்வராசா மற்றும் துரைராசா (கனடா), பாக்கியலீலா (ஓய்வு பெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற பரமேஸ்வரி, சித்திராதேவி, காலஞ்சென்ற நவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சிவபாதம் (Rtd Regional Manager People’s Bank), காலஞ்சென்றவர்களான நவரட்ணம், சின்னத்துரை, மற்றும் சிவகுமார் (சுவிஸ்), இராமச்சந்திரன் (ஜேர்மனி), முபின், முருகரத்தினம் (ஜேர்மனி), சற்குணசிங்கம் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சந்திரமணி, சறோஜாதேவி மற்றும் சிவகாமி (ஓய்வு பெற்ற ஆசிரியை), சிவனேஸ்வரி (ஜேர்மனி), மல்லிகாதேவி (ஜேர்மனி), கமலாதேவி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (06.07.2016) புதன்கிழமை மு.ப 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோண்டாவில் கட்டையாலடி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (06.07.2016)
இடம் : கோண்டாவில் கட்டையாலடி இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 115 6594