மரண அறிவித்தல்
திரு தம்பிப்பிள்ளை ஜீவரெட்ணம் (முன்னாள் உரிமையாளர்- பரந்தன் ரைஸ் மில், சங்கானை ஜீவன் ரைஸ் மில்)
யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வதிவிடமாகவும், லண்டன் Red Bridge ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை ஜீவரெட்ணம் அவர்கள்
(08-06-2016) புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செம்பொற்சோதி இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுசிகலா(லண்டன்), கோபிதாசன்(சங்கானை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற இன்பநாதன், சத்தியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தகோபால் (நந்தன்), இரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராசையா, கலாவதி, புஸ்பா, காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், தனபாலசிங்கம், குலேந்திரசிங்கம், மகேஸ்வரி, கருணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னேஸ், ஸ்ரீராம், குணேஸ், லினேஸ், கஜனேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
கோபி