மரண அறிவித்தல்
திரு தருமலிங்கம் பாலச்சந்திரன்
யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 14-08-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தருமலிங்கம், சிவக்கொழுந்து(நீர்கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திராதேவி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும், பாலகிருஷ்ணன்(லண்டன்), மகேந்திரன்(நீர்கொழும்பு), தவமலர்(ஜெர்மனி), கேதீஸ்வரதாசன்(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், லோகேஸ்வரி, பத்மலோசினி, பாலரூபன், ராசமலர், மகாலிங்கம், நாகலிங்கம், வசந்தராணி, வசந்தமலர், சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |