மரண அறிவித்தல்
திரு நடராசா நாகரெட்ணம் (ரெத்தி)
முல்லைத்தீவு தண்ணீரூற்று கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா நாகரெட்ணம் அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சயம்பு தங்கப்பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், விஜயகுமார்(இந்தியா), விஜிலதா(சுவிஸ்), பிரபாகரன்(நியூசிலாந்து), நிசாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், றோஜா(இந்தியா), பிரபாகரன்(சுவிஸ்), உமா(நியூசிலாந்து), சுதர்சன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், அருந்தவமலர், மனோகரமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நடராசா, கற்பகம், செல்வராசா, யோகேஸ்வரி, வேலுப்பிள்ளை, மகேந்திரன் , காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஹர்ஜன், ஹாணுஜன்(சுவிஸ்), கீர்த்திகா, றேணுகா(இந்தியா), அபிதன், அபிராமி(நியூசிலாந்து), விஹாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் திருவுடல் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நெளுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |