மரண அறிவித்தல்
திரு பொன்னம்பலம் சிவலிங்கம்
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், தற்போது தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவலிங்கம் அவர்கள் 31-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கோப்பெருந்தேவி, ரவீந்திரன்(ரவி-மாஸ்டர்), தவயோகேஸ்வரி, தனஈஸ்வரி, குகனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சின்னத்துரை(நல்லதம்பி), தர்மலிங்கம், அருளம்பலம், பாக்கியம்(மாணிக்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை(ஜனார்த்தனன்), ஜெயபாலினி, சந்திரமோகன், ஞானசோதி, விமலநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜமுகன்(சக்தி டிவி), கோமுகி, வதனராஜன், கௌதமி, வசந்தகோபி, வித்தியாதரன், காண்டீபன், கஜகுலப்பிரசன்னா, ஜெயப்பிரசன்னா, அர்ச்ஜனா, ஆனந், அட்சியா, அரவிந், சுஜெந், சுபானி, நிருபா, செந்தூரன்,
சபரீசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஈஷி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-02-2012 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணிக்கு அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, 11:00 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்,
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்