மரண அறிவித்தல்
திரு முத்துக்குமாரு பழனிவேலாயுதம்
காரைநகர் செம்பாட்டை பிறப்பிடமாகவும் தங்கொட்டுவையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முத்துக்குமாரு பழனிவேலாயுதம் அவர்கள் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு முத்துக்குமாரு – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனுமாவார்.
திருமதி சரஸ்வதியின் அன்புக் கணவருமாவார்.
சிவபாக்கியம், சோமசுந்தரம், அன்னபூரணம், தட்சணாமூர்த்தி கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பத்மலோஜினி, பத்மநாதன் (லண்டன்), பத்மராஜா (லண்டன்),பத்மரூபி ஆகியோரின் அன்புத் தந்ரைதயாருமாவார்.
மகேந்திரன், சிறிரஞ்சினி (லண்டன்), சம்பத்அப்புகாமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கயானன், சந்தோஷ், கபினாஷ், டிலானி, காமினி, வொஜினி, செனுல் ஆகியோரின் பாசமிகு பாட்டனாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (19.04.2016) இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கிரிமெட்டியான் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்