மரண அறிவித்தல்
திரு. யோசப் மெசியா
யாழ். கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாகவும் வவுனியா 115/05, ஆலடி வீதி, தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட திரு. யோசப் மெசியா அவர்கள் (09.01.2017) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் கலன்சென்ற யோசப், அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும் அமிர்தநாதன் – திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆன்மேரி அவர்களின் அன்பு கணவரும் யூட்பவுலேந்திரன் (லண்டன்), மொடஸ்ரா, யூலியட் ரேணுகா, ரோஜினி, அன்ரன் மதன்ராஜ் (மனிதவள முகாமைத்துவ உத்தியோகத்தர், ஒமேகாலைன், வவுனியா), அவர்களின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்றவர்களான அருமை, செல்லமணி, செல்வரட்ணம் மற்றும் தங்கமணி, திரேசம்மா, தவம், டேவிட், ஜோர்ஜ், ரஞ்சினி, லூர்த்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும் திருமதி ஜீன் வேஜினா (லண்டன்), சுரேஷ்குமார், விமல்ராஜ், கமலகரன்(pidilite lanka) பகுதி மேலாளர்), உதயரூபிணி (நிர்வாக உத்தியோகத்தர், ஒமேகாலைன், வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் செரினா, செரோம் (லண்டன்), யோவான், ஏஞ்சலினா, அட்ஷயன், சுவின்ரன், அபிஷன், ஜெய்சன் (வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்), ஷாம்ராஜ் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஈமக்கிரியைக்காக அன்னாரின் இல்லத்தில் இருந்து 11.01.2017 இன்று புதன்கிழமை பி.ப 2.00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயம், இறம்பைக்குளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பி.ப 3 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறம்பைக்குளம் சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.