மரண அறிவித்தல்
திரு.விஸ்வநாதன்பிள்ளை ராஜேந்திரன்
திருச்சி மாவட்டம் வடமலைப்பட்டி கிராமம் திரு.விஸ்வநாதன்பிள்ளை ராஜேந்திரன் அவர்கள் 04.11.2016 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.விஸ்வநாதன்பிள்ளை கமலாம்பாள் தம்பதிகளின் மகனும் ஹட்டன் காலஞ்சென்ற P.T.S.ராமலிங்கம்பிள்ளை பாப்பம்மாள் தம்பதிகளின் மருமகனும், doctor புஸ்பலீலா (ஆயுர்வேத வைத்தியர் – அம்பகமுவ பிரதேச சபை ) வின் அன்பு கணவரும், ராகுலின் அன்பு தந்தையும், புவனேஸ்வரி(பதுளை), விஜயகுமார்(பண்டாரவளை), பிரகலாதன்(பெங்களூர்), ரவிச்சந்திரன்(கொழும்பு), அமரர்களான மாணிக்கவாசகம், முத்தையா, நமசிவாயம், மனோகரன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு சகோதரனும், யோகேஸ்வரி(சட்டத்தரணி – uk), கருணாகரன்(சட்டத்தரணி-ஹட்டன்), கல்யாணி (ஆசிரியை – சென்னை), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல.11, திம்புள்ள வீதி, ஹட்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 06.11.2016 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இறுதி கிரியைகள் நடைபெற்று காலை 10.30 மணியளவில் கொட்டகலைகொமர்ஷல் தகனச்சாலையில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.