மரண அறிவித்தல்
திரு. விஸ்வநாதன் சிவராஜசிங்கம்
அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு விஸ்வநாதன் சிவராஜசிங்கம் அவர்கள் (30.05.2016) திங்கட்கிழமை காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன் லட்சுமி அம்மாள் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செல்வநாயகியின் அன்புக் கணவரும்,
சிவதாசன், சிவதர்ஷினி, சிவதர்மினி, கபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சிவலிங்கதாசன், கோமதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிஷா, சுஜா, அக்ஷயன், ரோஹித் ஆகியோரின் அன்பு பேரனாரும், விக்கினேஸ்வரி, மங்கையற்கரசி, காலஞ்சென்ற சிவானந்தராஜா, சிவஞானசேகரம் காலஞ்சென்ற சிவதாசன், சிவரூபன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலங்சென்ற கந்தையா, சிவநேசன், மனோராணி, சிவயோகராணி, ஆதிரை, காலஞ்சென்ற சிவயோகநாதன், வேதநாயகி, தெய்வசிகாமணி, சிற்றம்பலநாதன், காலஞ்சென்ற ஆனந்தசிகாமணி ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (31.05.2016) செவ்வாய்க்கிழமை மகிந்தமலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு (01.06.2016) புதன்கிழமை பிற்பகல் 2மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 05.00 மணிக்கு தகனக்கிரியைக்காக கல்கிசை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.