மரண அறிவித்தல்
திரு வைரவன் கதிரவேலு (Retired Deputy Surveyor General North East Province)
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் கதிரவேலு அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரவன், இலக்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற செல்லன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பாக்கியம் அவர்களின் ஆருயிர்க் கணவரும், பூங்கொடி(ஆசிரியை- லண்டன்), பவானி(சிரேஷ்ட விரிவுரையாளர்- ஸ்ரீபாத கல்லூரி பத்தனை), இளங்கோ(Vetarny Doctor- அவுஸ்திரேலியா), உதயஸ்ரீ(நில அளவையாளர்- திருகோணமலை), முகுந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற செல்லத்துரை, கோபாலன், மற்றும் குணபாலன்(ஓய்வுபெற்ற தாதியர்- தெல்லிப்பளை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சூசைப்பிள்ளை(Contractor- லண்டன்), லோகேஸ்வரன்(Dean- ஸ்ரீபாத கல்லூரி பத்தனை), மேனகா(Vetarny Doctor- திருகோணமலை), சுபிதா(ஆசிரியை), கிருஜா(ஆசிரியை- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற தங்கராசா- புவனேஸ்வரி, தெய்வேந்திரம் தேவி மனோகரி(ஆசிரியர்- ஜெர்மனி), மகேந்திரன்(ஓய்வுபெற்ற அதிபர்- யாழ். மத்திய கல்லூரி), லதா(ஆசிரியர் – யாழ் சுண்டுக்குழி மகளீர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுமங்கலி, கீதன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், சிரன், திரிஸ்கா, டிலக்சன், பிரனீசன், யுக்ஷினி, பில்ரன், சன்ரன், நின்ரன், மிதுஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |