மரண அறிவித்தல்
மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன் (முன்னாள் ஊழியர் பரந்தன் இரசாயனப்பொருட்கள் கூட்டுத்தாபனம், ICRC புதுக்குடியிருப்பு, கியூடெக் புதுக்குடியிருப்பு)
கிளாலியை பிறப்பிடமாகவும் பரந்தன், முரசுமோட்டை, கைவேலி , கொழும்பு ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய மரியாம்பிள்ளை எட்வே ட் அன்ரன் 20.09.2017 அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை -அன்னம்மா தம்பதியரின் பாசமிகு மூத்த மகனும் மேரி அஞ்சலீனாவின் அன்பு கணவரும் காலஞ்சென்றவர்களான இராசேந்திரம்-எலிசபேத்தம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும் மேரிகெலன் , அல்போன்ஸ் ஜெயரட்ணம் ( முன்னாள் ஊழியர் பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம் , கெயர் சர்வதேசம் -யூனிசெப் ), அல்வீனா ஜெயசீலி (முன்னாள் ஊழியர்- கரைச்சி வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கம், பரந்தன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் றெஜினா சாந்தினி (லண்டன்), அனிற்றா றாஜினி (கொழும்பு), அமலதாஸ் (பொறியியலாளர்-கொழும்பு), றொபினா தயாளினி (ஆஸ்திரேலியா), றமேஸ் விமலாதாஸ் , மரினா ஷாமினி (கொழுப்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும் எட்வே ட் கொன்சீலன் (லண்டன்), ராஜ்குமார் (ஆஸ்திரேலியா), அருள்ராஜ் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் மாமனும் மார்க்கஸ், ஷொபியா (லண்டன்), கியுட்ஷா , கேட்றிஜன் (கொழும்பு), ஜொனன்ரன் , நெவிங்ரன் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பாடசாலை ஒழுங்கை, நாவற்குழி இல்லத்தில் வைக்கப்பட்டு நல்லடக்க ஆராதனையும் இரங்கல் திருப்பலியும் எதிர்வரும் (25.09.2017) திங்கட்கிழமை மு.ப. 10.00 மணிக்கு நாவற்குழி புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டு நாவற்குழி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்
பாடசாலை ஒழுங்கை,
நாவற்குழி