31ம் நாள் நினைவஞ்சலி
அமரர். திருமதி.தங்கராஜன் சுககன்னியா
பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கராஜன் சுககன்னியா
அவர்கள் கடந்த 06.04.2020 அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்று பூதவுடல் அரியாலை சித்து பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அன்னார் பொன்னையா தங்கராஜன் (ஓய்வு பெற்ற பொறியியலாளர், கட்டடங்கள் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும், அநுகரன் (பொறியியலாளர்- ஜேர்மன்), சுபாகரன் (பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), கிருபா (தொழில் திணைக் களம் – திருகோணமலை), கருணா (மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும், யாகு (ஜேர்மன்), சுதாயினி (அவுஸ்திரேலியா), சிவபாலன் (புள் ளிவிபரவியல் திணைக்களம் – திருகோணமலை), யூதா (மட்டக்களப்பு ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
துஜன், துஷானா (ஜேர்மன்). பவின், சஜின் (அவுஸ்திரேலியா), கேருஷன், சாருஜன் (விவேகானந்தா கல்லூரி – திருகோணமலை), ருக்ஷன் (திருகோணமலை), அனுப்பிரியா, அனுராகவன் (மட்டக்களப்பு) ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் 31 ஆம் நாள் நினைவஞ்சலி 06.05.2020 யாழ்ப்பாணத் திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது என்பதனை தங்களுக்கு அறியத் தருவதுடன்.
தொலைபேசி மூலம் அனுதாபங்கள் தெரிவித்தவர் இறப்புகளுக்கும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட அயலவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்:- கணவர்
பொ.தங்கராஜன்
54,விபுலானந்தர் வீதி,
கொழும்புத்துறை