மரண அறிவித்தல்
அமரர் திரு. பெரியதம்பி சிவகடாச்சம் (ஓய்வு பெற்ற நில அளவையாளர்)
யாழ் இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி சிவகடாச்சம் அவர்கள் (30.01.2017) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி பெரியதம்பி கண்மணி தம்பதியரின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்ற பூவிலட்சுமியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கலைமகள், உலகேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரனும், சகிலா, அகிலா, அருணா, சுகந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுதாகர், பிரம்மா, வரதகுமார், சிவகுமார், சிவகுமார் அவர்களின் அன்பு மாமனாரும், சுஷைன், ஷைனா, கரணி, மதுமி, அக்சயா, அக்சரா, லக்ஸ்மி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (01.02.2017) புதன்கிழமை காலை 10.00 மணியிலிருந்து அன்னாரின் இல்லத்தில் (291/6A , எட்வாட் அவெனியு, ஹெவலொக் றோட், கொழும்பு-6) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (02.02.2017) வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு கிரியைகள் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக பொரளை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.