முதலாம் ஆண்டின் நீங்கா நினைவில்
அமரர்.திரு.வேலு பிரபாகர் (ஆற்றல் மிகு கணித ஆசிரியர் – கம்பளை இந்துக்கல்லூரி )
தோற்றம்: 03.12.1970 - மறைவு: 16.10.2016
ஆண்டொன்று கழிந்தது-ஆயினும்
ஆழ் மனத்துயரம் ஆறவில்லை !
கண்முன்னே கடமை பேணி -வாழ்ந்த
காலம் கனவாகிப் போகுமோ ?
சத்தியமாய் உங்களது – உயர் நினைவு
நித்தியமாய் நிலைத்தே நிற்குமய்யா !
மகிழ்ச்சியுடன் விளையாடிய போதில் – காலன்
மனம் வந்தெப்படி உங்களை கவர்ந்தான் ? – உள
நெகிழ்ச்சியுடன் இறைஞ்சுகின்றோம் !- இறைவா
நேர்த்தியாய் ஆத்ம சாந்தியை அருளுவாயாக !
உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால் – உணர்வுகளால்
உயர் நினைவுகளால் – எம் உடனேயே வாழ்கின்றீர்!
ஆத்ம சாந்திக்காக அனுதினம் பிரார்த்திக்கும்
அன்பு மனைவி : இந்திரா தேவி பிரபாகர்
ஆசை மகன்மார் : அபிஷேக் , லங்கேஸ்
அருமை மகள்:அபிராமி
0812079573
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0812079573