நினைவஞ்சலி
அமரர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன் (ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர், பிரதி அவைத் தலைவர்,வடக்கு மாகாண சபை)
அமரர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன் அவர்கள் 31 ஆம் நினைவஞ்சலி நாளை (31.10.2016) திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு புனித இராயப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் முல்லைத்தீவு நகரத்தில் அமைந்துள்ள பிரதேச சபை திருமண மண்டபத்தில் நினைவுமலர் வெளியீடும் நினைவுரைகளும் இடம்பெறும். இராப்போசனத்தில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாகக் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் மரணம் ஏற்பட்ட சமயத்தில் அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றவர்கள் மரண விசாரணையிலும் உடலை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு உதவியவர்கள் மற்றும் இறுதி அஞ்சலி நிகழ்வை முல்லை மைதானத்தில் மிகச் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி நடத்துவதற்கு முன்னின்று உழைத்த இலங்கை தமிழரசுக்கட்சி அன்பர்கள் குறிப்பாக பாராளமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன் அவர்களுக்கும் மற்றும் இளைஞர்கள் , வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சகல பாகங்களில் இருந்தும் துயரை வெளிப்படுத்தும் பனர்கள் காட்ச்சிப்படுத்தியவர்கள், துண்டு பிரசுரங்கள் வெளியிட்டவர்கள், மலர் வளையங்கள் வைத்தவர்கள், தொலைபேசி, தந்தி, தொலைநகல், மின்னஞ்சல் மூலம் எம் துயரில் பங்கு கொண்டவர்கள், வெளிநாடுகளில் இருந்து துயரில் பங்கு கொண்ட புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் மற்றும் அன்னாரின் பூதவுடலுக்கு நேரில் வருகை வருகை தந்து அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சி தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களுக்கும் கௌரவ அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் அமைச்சர்கள், பாராளமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை அவைத் தலைவர், கிழக்கு மாகாண பிரதி அவைத் தலைவர் வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர், வடக்கு,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச, அரசசார்பற்ற ஸ்தாபனங்களின் உயர் அதிகாரிகள், நிர்வாகிகள் அனைவருக்கும் முல்லை.மைதானத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சித் தலைவர், ஏனைய பாட்டாளி கட்சி சார்ந்தவர்கள், பாராளமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் மற்றும் மற்றும் இரங்கல் செய்தி அனுப்பி இருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி. விக்கினேஸ்வரன் அவர்களுக்கும் மற்றும் எமது பங்கு தந்தை ஊடாக இரங்கல் செய்தி அனுப்பி இருந்த அதி வணக்கத்துக்குரிய ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களுக்கும் அருட் தந்தையர், அருட் சகோதரர்கள், அனைவருக்கும் மற்றும் இறுதி ஊர்வலத்தில் பாண்ட் வாத்தியம் இசைத்த பாடசாலைகள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், சகல விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கிய போலீசார், போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி கொடுத்த முல்லை மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர், கடைகளை மூடி தம் அஞ்சலியை தெரிவித்த கடை உரிமையாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.