மரண அறிவித்தல்
அமரா் இரத்தினசிங்கம் தனபாக்கியம்
யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு நாகபூசணி அம்மன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொட்டாஞ்சேனை கொழும்பில் வசித்து வந்தவருமாகிய இரத்தினசிங்கம் தனபாக்கியம் (27.10.2015) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராசா – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற இரத்தினம்மா – திருஞானசுந்தரம் அவா்களின் அன்புச் சகோதரியுமாவார்.
காலஞ்சென்ற சின்னப்பு இரத்தினசிங்கம் (கிராமத் தலைமை அதிகாரி – விதானையார் ) அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிதரன், நிர்மலன் (இலங்கை வங்கி, தலைமைக் காரியாலயம், கொழும்பு), மைத்ரேயி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
குணநாயகம் (ஜேர்மனி), பத்மாவதி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சிறியதாயும், விமலாதேவி, ரஜிநாயகி (கொழும்பு), ஜெகநாதன் (லண்டன்) ஆகியோரின் அன்ப மாமியாருமாவார்.
தர்சினி ஐங்கரன் (யா/ கோண்டாவில் இராம கிருஷ்ண ம.வி), சுகாசினி தயாளன் (லண்டன்), காயத்திரி சயந்தன் (லண்டன்), Dr.நிசா (யாழ் போதனா வைத்தியசாலை), அபிசன் (யாழ் இந்துக் கல்லூரி), அர்ஜுன் (கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி),நிவேதிகா ஒலிவியர் (லண்டன்), அபிராம் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாருமாவார்.
அஷ்வின், ஆகாஷ், ஆரணி, அபிஷயன், ஆரபி, ஆருஷி ஆகியோரின் அன்பு பூட்டியாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் கோண்டாவில் கிழக்கு, நாகபூசணி அம்மன் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நாளை (30.10.2015) நடைபெற்று முற்பகல் 11மணிக்கு பூதவுடல் தகனக் கிரியைக்காக கோண்டாவில் கட்டையலடி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்