மரண அறிவித்தல்
அமரா் கந்தையா கருணாகரன் (USHA Sales executive and Quality controller)
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும் பொற்கலந்தம்பையை நிரந்தர வசிப்பிடமாகவும், கொல்லங்கலட்டி மற்றும் புத்தளத்தில் வசித்தவருமாகிய கந்தையா கருணாகரன் நேற்று (12.10.2015) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – கனகபாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு (Railway Guarantor) சின்னத்தங்கம் தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
ஜெயராணியின் அன்புக் கணவரும்,
அகிலா (ஜேர்மன்) குமரன், நகுலா (ஆசிரியை, நீல பெம்ம சாலிய வெவ), அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேஷ்கமார் (ஜேர்மன்), ரீட்டா ஆகியோரின் பாசமிகு மாமனும், கிருஷ்ணா, தேவேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும், கனகாங்கி, காலஞ்சென்றவர்களான கிருபாகரன் , தனகரன் மற்றும் தவகரன், மோகனாங்கி, தினகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற செல்வமாணிக்கம் மற்றும் காராளசிங்கம் காலஞ்சென்ற மணிமேகலை மற்றும் அற்புதராணி, செல்வராணி, ரவீந்திரன், யோகேந்திரன் காலஞ்சென்ற கஜேந்திரன் மற்றும் தவராணி ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (14.10.2015) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் (பொற்கலந்தம்பை, வித்தகபுரம்) நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11.00 மணியளவில் கொப்பிலாவிடை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினா்.