மரண அறிவித்தல்
அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை
யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று நோர்வே Fredrikstad இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிலிப்பு பேதுருப்பிள்ளை, பேதுருப்பிள்ளை லெயக்கோதியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்ற லேஞ்சியூஸ் பேதுருப்பிள்ளை, எட்வேட் பேதுருப்பிள்ளை, அல்பிறட்பேதுருப்பிள்ளை, றோஸ்மலர் ஞானப்பிரகாசம், பெனடிக்ற் பேதுருப்பிள்ளை(கனடா), ரெபேக்கா எட்வேட்(இலங்கை), மொணிக்கா குணபால(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr.எல்மர், மல்லிகா, தேவிகா, பிரமிளா, ரவி, சுஜா, விஜி, றகு, குமார், விஜயன்,சந்திரன், லலிதா, கிரிஜா, ராஜினி, ஜோசப், காலஞ்சென்ற பீற்றர், அன்ரன், பபி, தவம், செல்வம் ஆகியோரின் நேசமிகு சிறிய தந்தையும்,
பபா, பேபி, பபி, அருட்தந்தை பீற்றர், சித்திரா, ஆன், திரேஸ், யசோ, யூடி, அமுதா, அருட்தந்தை ஜெகத், அஜித், காலஞ்சென்ற சனத், றஜித்தா, சுஜித், சுகத், சுமித், சந்திரிக்கா, ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை குருக்கள், துறவிகள், அருட் சகோதரிகள், உற்றார், உறவினர், நண்பர்கள், பங்கு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
50 பேர் மட்டுமே திருப்பலியில் பங்கு கொள்ள முடியும் என்பதால் திருப்பலிக்கு செல்ல விரும்புபவர்கள் அருட் தந்தை ஜகத் பிறேமநாத்தை 004741468740 தொடர்புகொள்ள கேட்டு நிற்கிறோம்.