மரண அறிவித்தல்
ஆறுமுகம் சோமசுந்தரம்
காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்கள் இன்று வியாழக்கிழமை (27.02.2020) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம், தெய்வானையின் அன்பு மகனும் கிருஸ்ணர், செல்லாச்சியின் பாசமிகு மருமகனும் கெங்காதேவியின் அன்புக் கணவரும் தருமரின் அன்புச் சகோதரரும் சுபத்திராதேவி, சுபேந்திராதேவி, சுரேந்திரராசா, சியாமளாதேவி(சுவிஸ்) ரபேந்திரராசா, சுதாமளாதேவி(லண்டன்) சிவராசா ஆகியோரின் அன்புத் தந்தையும் கமலேஸ்வரன், பிரியதர்ஷினி(ஆசிரியை, யா/சென்மேரீஸ் வித்தியாலயம்) சற்குணம்(சுவிஸ்) நகுலா(பிரதேச செயலகம் நல்லூர்) சத்தியதாசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் மயூரதி, மயூரன், அகீபன், மருசனா, கஜானன், தீபிகா, அக்ஷிதா, அக்சரா, அபிஷா, அபிஷன், அபிஷனா, அமரர் அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (28.02.2020) வெள்ளிக்கிழமை நாளை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றுத் தகனக் கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
நாவலடி கேணி வீதி
காரைநகர்