மரண அறிவித்தல்
திரு.ஆறுமுகம் நவரத்தினம் (ஓய்வு பெற்ற ஒப்புநோக்காளர், அரசாங்க அச்சகத்திணைக்களம் )
காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஆறுமுகம் நவரத்தினம் அவர்கள் (ஓய்வு பெற்ற ஒப்புநோக்காளர், அரசாங்க அச்சகத்திணைக்களம் ), 06.11.2017 ஆம் திகதி (திங்கட்கிழமை) காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம்,அன்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை புதல்வனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், தங்கம்மா அவர்களின் அன்பு கணவரும்,தேவிகா (தொழில் திணைக்களம் ),கிருபாகரன்(பிரித்தானியா),தருமராசா(பிரித்தானியா ),பிரபாகரன் (பிரித்தானியா) ஆகியோரின் அருமை தந்தையும், மகாதேவா(ஆணையாளர், தொழில் திணைக்களம், கொழும்பு), கவிதா (பிரித்தானியா), துஷ்யந்தி (பிரித்தானியா), யுகா (பிரித்தானியா) ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கொழும்பு, பொரளை ஜெயரத்ன மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 09.11.2017 நாளை (வியாழக்கிழமை)பி.ப 2.30 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்
0112595023
0714969267