மரண அறிவித்தல்
இராசலிங்கம் நாகராஜா (மாஸ்ரர்) (ஓய்வுநிலை ஆசிரியர்)
சுதுமலை வடக்கை பிறப்பிடமாகவும் வீரபத்திரர் வீதி, நுணாவில் மேற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் நாகராஜா கடந்த (29.09.2017) வெள்ளிக்கிழமை இரவு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் – வள்ளியம்மை தம்பதியரின் சிரேஸ்ட புத்திரனும் பரமேஸ்வரி (ஆசை)யின் பாசமிகு கணவரும் புவனேஸ்வரி, பேரின்பநாயகம் (ஸ்ரீ சுபா பேக்கரி, சுதுமலை) மகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும் ரமேஷ் (நோர்வே), ரமணன் (நொதேர்ன், சுன்னாகம்), அஞ்சனா (கனடா), அனுபமா (கனடா), அகல்யா (H.N.B சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஏலின் அனிற்றா (நோர்வே), ரஜித்தா (அளவெட்டி), குணராஜா (கனடா), வரதராஜா (கனடா), பாபுஜி (H.N.B கிளிநொச்சி வடக்கு) ஆகியோரின் அன்பு மாமனும் தவராசா, அழகம்மா, காலஞ்சென்ற தில்லையம்பலம் மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் அன்னம்மா ஆகியோரின் மைத்துனரும் எம்மி அஜந்தா, மாயா ரொக் ஷனா, மார்ட்டின், மதுமிதா, கோபிஷன், சஞ்சீவ், சாம்பவி, சாருகா, ஓவியன், ஓவியா, பூஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.09.2017) திங்கட்கிழமை மு.ப. 11.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைக்காக குச்சப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்