மரண அறிவித்தல்

உயர்திரு வேலாயுதம் செல்வராஜா (ஓய்வு பெற்ற பொலீஸ் உத்தியோகத்தர் )

தோற்றம்: 02.03.1947   -   மறைவு: 25.10.2017

 

வீமன்காமம் பளையைப் பிறப்பிடமாகவும் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் செல்வராஜா 25.10.2017 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலாயுதம் – வள்ளியம்மை தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும் காலஞ்சென்றவர்களான சபாபதி பூமணி தம்பதிகளின் அருமை மருமகனும் றஞ்சிதா தேவியின் (CWE யாழ்.நகர்)  பிரியமான துணைவரும் தனுஜன் (பிரான்ஸ்),  தர்ஷன்  (பிரான்ஸ்) காலஞ்சென்ற தார்மீகன் மற்றும் நாகதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் தர்ஷன், சஷ்ரிகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் அஸ்மிக்காவின் (பிரான்ஸ்) இனிய அப்பாவும் காலஞ்சென்றவர்களான செல்லம்மா,  இரத்தினசிங்கம்,  நவமணி, செல்வநாயகம்,  செல்வராணி ஆகியோரின் அன்பு சகோதரனும் சபா.புஷ்பநாதன் (துர்க்கா பொத்தகச்சோலை),  புஷ் பதேவி ஜெகநாதன் (சாயி புக்சொப், கொழும்பு),  DR.ரேணுகாதேவி,  செல்வநாதன்  (டென்மார்க்),  சபாநாதன் (ஜேர்மானி) காலஞ்சென்ற சத்தியநாதன் மற்றும் சற்குணநாதன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்த்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  நாளை  (29.10.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இருந்து கொத்தியாலடி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

36,தோம்பைவீதி,
சுன்னாகம்.

தகவல்:மனைவி,பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (29.10.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00
இடம் : கொத்தியாலடி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 224 25 88
கைப்பேசி : 077 626 75 38