மரண அறிவித்தல்
கந்தையா கிருஸ்ணபிள்ளை
சங்கானை தொட்டிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கிருஸ்ணபிள்ளை கடந்த 14.05.2018 திங்கட் கிழமை காலமானார் .
அன்னார் காலஞ்சென்றவர்களான கிட்டினர் கந்தையா நாகபூரணம் தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்ற நாகராச மற்றும் அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் ஜெயராஜ நாயகியின் அன்புக்கணவரும் ராஜ் கண்ணா (கிராம அலுவலர் ) அன்பு தந்தையும் கந்தையா நவரத்தினத்தின் அன்பு அண்ணனும் நவரத்தினம் மாலதியின் அன்பு மைத்துனரும் நவரத்தினம் நமாசியாவின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (17.05.2018) வியாழக்கிழமை மு.ப 9 மணியளவில் தொட்டிலடி சங்கானையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப 10 மணிக்கு விளாவெளி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
மொன்றியல், கனடா
தகவல்
கந்தையா நவரத்தினம்
15149280905