மரண அறிவித்தல்
கப்டன் என். சோமசுந்தரம் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர், JP)
மலேசியாவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மணிக்கூட்டு ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சோமசுந்தரம் (26.10.2015) திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மலாயன் பென்சனியர் நாகலிங்கம் – சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – தங்கம்மா தம்பதியிரின் பாசமிகு மருமகனும்,
கனகாம்பிகை (முன்னாள் உப அதிபர் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை ) அன்புக் கணவரும் ஆவார்.
சுரேஷ் (அமெரிக்கா), நிறைஞ்சனா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரியகலா, ரூபராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யாழன், சனா, சானுகா, சகானா ஆகியோரின் அன்புப் பேரனும், தனலட்சுமி, இந்திரமலர், சந்திரமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார், காலஞ்சென்ற திருச்செல்வவிநாயகமூர்த்தி, சிவயோகம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தா (நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலகம் ஊர்காவற்துறை), ராதா, சுகிர்தா (ஆசிரியை யா/நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயம்), லதா(சுவிஸ்), சரண்ஜா, சாரங்கி, பாலச்சந்திரன், சுந்தரேஸ்வரி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கணேஸ்வரன் (மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்), ஸ்கந்தகுமார் (சிங்கப்பூர்) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (28.10.2015) புதன்கிழமை நண்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பையன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினா், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்