மரண அறிவித்தல்
கமலாதேவி நவரட்ணராஜா (இளைப்பாறிய ஆசிரியை)
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை, ரசிகா தொடர்மாடி, டபிள்யு சில்வா மாவத்தையை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி. நவரட்ணராஜா (இளைப்பாறிய ஆசிரியை யாழ்ப்பாணக்கல்லூரி, மெட்ரோ சர்வதேசம் கல்லூரி) அவர்கள் 25.02.2020 அதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு – கனகாம்பிகை அவர்களின் அன்பு மகளும், – காலஞ்சென்ற தம்பையா – ராஜிதம்மாவின் மருமகளும், நவரட்ணராஜாவின் பாசமிகு மனைவியும், றோகன் (USA), மைதிலி(USA) ஆகியோரின் அருமைத் : தாயாரும், ரூபன் (USA)இன் அன்பு மாமியாரும், அன்ரூ, எலனா ஆகிய இருவரின் < நட்புக்குரிய பேத்தியும் காலஞ்சென்ற ராஜேந்திரா, பேராசிரியர் இந்திரபாலா(அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற லீலாவதியின் உடன் பிறப்பும், காலஞ்சென்ற திலகேஸ்வரி, செல்வராணி, பிரியதர்ஷினி(அவுஸ்ரேலியா) காலஞ்சென்ற திருச்செல்வம், நடராஜா, ஜீவராஜா(அவுஸ்ரேலியா), யோகேஸ்வரி (அவுஸ்ரேலியா), திலகேஸ்வரி காலஞ்சென்ற விக்னேஸ்வரி, சாந்தகுமார்(கனடா) ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 7/1A, மெனெரிகம பிளேஸ், கல்கிசையில் இன்று சனிக்கிழமை 29.02.2020 திகதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை 01.03.2020 திகதி காலை 08.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு 10.00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
தகவல்: குடும்பத்தினர்