மரண அறிவித்தல்
செல்லையா ஜெயசேகரம் (இளைப்பாறிய தபால் அதிபர்)
கொடிகாமம் பெரியநாவலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஜெயசேகரம் நேற்று (13.11.2015) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) மெனிக்கா தம்பதியரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் – பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனுமாவார்,
இராசலட்சுமியின் (தாதிய உத்தியோகத்தர் ஆதரா வைத்தியசாலை, சாவகச்சேரி ) அன்புக் கணவரும், விஷ்ணுபிரசாத்தின் (லண்டன்) அன்புத் தந்தையுமாவார்,
அமரசேகரம் (தலைவர் – பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் கொடிகாமம்), தர்மசேகரம் (பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் கொடிகாமம் – முகாமையாளர்), ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நடராசா மற்றும் யோகராசா, சிவராசா, சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (15.11.2015) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 10.00 மணிக்கு வேவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
மனைவி