மரண அறிவித்தல்

செல்லையா திருநாவுக்கரசு (முத்து பத்தர்)

வரணி இடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், இல.36 இராமநாதன் வீதி,நாச்சிமார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா திருநாவுக்கரசு (முத்து பத்தர்) 09.09.2015 புதன்கிழமை இறைபதமடைந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா-இரத்தினம் தம்பதியரின் அன்பு மகனும், சிதம்பரப்பிள்ளை-நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும் சிதம்பரப்பிள்ளை – நாகம்மா தம்பதியரின் அருமை மருமகனும் சரஸ்வதியின் அன்புக் கணவரும், காலஞ் சென்றவா்களான தங்கரத்தினம், சுப்பிரமணியம், (பொன்னையா பத்தர்) ஆகியோரின் அருமைச் சகோதரனும், திருச்செல்வம் (டென்மார்க்), கலைவாணி, முரளிதரன் (காயத்திரி நகைத் தொழிலகம்), ரமேஷ் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தவரஞ்சினி (டென்மார்க்), ஸ்ரீதரன் (அதிபா்- யா/புங்குடுதீவு , இராஜராஜேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம்), சுனேத்திரா, சிவதர்சினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனும், ஹரி, விநோத், ஹரிணி (டென்மார்க்), நித்தியாரணி, நிரோஜிதன், மயூரி, காயத்திரி, பிரகஜன், அஜிவ், ஹரேஸ், சன்ஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற கந்தசாமி பத்தர் மற்றம் இராஜேஸ்வரி, காமாட்சியம்மா, காலஞ்சென்ற சதாசிவம் (புத்திசாலி) மற்றும் தனலட்சுமி, நகுலேஸ்வரி, காலஞ்சென்றவா்களான ஜெயக்குமார், சண்முகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் நேற்று (13.09.2015) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவி்ல் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினா், நண்பா்கள் அனைவரும் எற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினா்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 13.09.2015
இடம் : கோம்பயன்மணல் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
தொலைபேசி : 0775289281