மரண அறிவித்தல்
திரு தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம்
அலவத்தை, அளவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம் நேற்று (23.02.2020) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகனும், சிவகனகாம்பிகையின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு (முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர்) மற்றும் சபாரத்தினம் (சோமு – லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், கலைமகள், செல்வராணி ஆகியோரின் மைத்துனனும், உமா (லண்டன்), முரளி (லண்டன்), ஆதவன் (J.P – ஆசிரியர் – யா/பன்னாலை சேர் கனகசபை அ.த.க.பாடசாலை, வலி. வடக்கு பிரதேசசபை உறுப்பினர்), உஷா (கொழும்பு). கீதா (ஆஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும். சந்திரகுமார் (லண்டன்), கஜேந்தினி (லண்டன்), சிவசாம்பவி முகாமைத்துவ உதவியாளர் – சண்டிலிப்பாய்), பிரபாகரன் (கொழும்பு), ஜெயகஜன் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனும், சாம்பவி. சரன், ஹரிஸ்மிதா. சயானா, சிருஸ்டிகன். அட்சரன். ஜஷ்வினி. ஆருஷா, அபிநிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (25.02.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் தகனக் கிரியைக்காக மல்லாகம், இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.