மரண அறிவித்தல்
திருமதி இரத்தினேஸ்வரி அருளானந்தம்
யாழ்ப்பாணம் கொக்குவிலை பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோயிலடியை வசிப்பிடமாகவும், தற்போது திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினேஸ்வரி அருளானந்தம் 24.09.2015 வியாழக்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வநாயகம் பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருளானந்தத்தின் பாசமிகு மனைவியும்,
விமலாதேவி, ஜீவானந்தன் (நீர்ப்பாசன திணைக்களம்-திருகோணமலை), செல்வகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவராஜா (ஓய்வு பெற்ற நீதிமன்ற சுருக்கெழுத்தாளர்), கலாதேவி, சுகந்தினி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கேதாரனி, துஷ்காந்தினி (கொமிற்றி றிப்போட்டர் பாராளுமன்றம்), ரஜீபன், கஜீபன், அருணன் (கனடா), அருஷ்ணவி (கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (27.09.2015) ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணியளவில் திருகோணமலை மின்சார நிலைய வீதி, இல 101 இல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்,
மகன் – ஜீவானந்தன்.
இல-101 மின்சார நிலைய வீதி, திருகோணமலை