மரண அறிவித்தல்
திருமதி கண்மணி சிவலிங்கம்
மரண அறிவித்தல்
பிறப்பு-09.04.1942 இறப்பு-03.12.2015
திருமதி கண்மணி சிவலிங்கம்
யாழ்ப்பபாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளையையும் வவுனியா குட்செட் வீதியை வதிவிடமாக கொண்டிருந்த திருமதி கண்மணி சிவலிங்கம் அவர்கள் 03.12.2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரெட்ணம் வள்ளியம்மை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சிவலிங்கம் ஆசிரியையின் அன்பு மனைவியும், கலையரசி (பிரதேச செயலகம் -தெல்லிப்பளை), சிந்தனைச்செல்வன் (கொ-விவேகானந்தாக்கல்லூரி கொழும்பு-13), மொழியரசி (பிரதேச தபால் அத்தியட்சகர் காரியாலயம்-வவுனியா) , திருவருட்செல்வன் (வ-விபுலானந்தக்கல்லூரி பண்டாரிக்குளம் வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், நற்குணசிங்கம் (யாழ்-இளவாலை மெய்கண்டான் வித்தியாலயம்), ஸ்ரீகௌரி (Lake Land Inter American School, இரத்மலானை), நிமால் (வன பரிபாலனைத்திணைக்களம்-வவுனியா), நித்தியா (வ-வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயம் வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், டினேஸ், அஜித், தனுஷா (வ-தமிழ் மத்திய மகா வித்தியாலம்), கலியுகன் (யாழ் மகாஜனக் கல்லூரி), ஸ்ரீமாதுரி (கொ-இராமநாதன் இந்து மகளிர்க்கல்லூரி-கொழும்பு-04), ஸ்ரீமாதுமை (கொ-சைவ மங்கையர்க்கழகம் கொழும்பு-06) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.12.2015 இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை வீதி, தெல்லிப்பளை கிழக்கு, தெல்லிப்பளையிலுள்ள இல்லத்தில் நடைபெற்று மாலை 3.00 மணிக்கு தகனக் கிரியைக்காக பூதவுடல் தெல்லிப்பளை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்-குடும்பத்தினர், பிள்ளைகள்
தொடர்பு-0777 550332