திருமதி கனகாம்பிகை சண்முகநாதன் (முன்னாள் ஆசிரியை -கமலாம்பிகை கனிஸ்டமகாவித்தியலயம் புங்குடுதீவு 7)

புங்குடுதீவு ,மடத்துவெளி,8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,கனடாவில் வசித்தவரும் தற்போது மடத்துவெளி 7ஆம் வட்டாரத்தில் வசிப்பவருமாகிய திருமதி கனகாம்பிகை சண்முகநாதன் 20.11.2015 வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசம்பு -அமராவதி தம்பதியரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற அருணாசலம் மற்றும் பத்தினிப் பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் ,சண்முகநாதனின் அன்பு மனைவியும் சுமித்திரா(கனடா) ,சுஜீவன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ,காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி வரராசசிங்கம் ,மனோன்மணி ,கைலாயநாதன் மற்றும் தனபாலசுந்தரம் ,திருஞானம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ,குலசேகரம்பிள்ளை ,ஞானம்மா ,திருநாவுக்கரசு ,ஞானவல்லி ,சந்திரகுமாரி,நமசிவாயம்,இராஜேஸ்வரி,திருநாவுக்கரசு ஸ்ரீராசசிங்கம் காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை ,சதாசிவம் ,நிர்மலாதேவி ஆகியோரின் மைத்துநியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நாளை 23.11.2015 திங்கட்கிழமை நடைபெற்று பூதவுடல் மு.ப 10 மணிக்கு தகனக் கிரியைக்காக கோரதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .

அ.சண்முகநாதன் (கணவர்)

வட்டாரம் 7
புங்குடுதீவு .

நிகழ்வுகள்
கனடா
திகதி : 23.11.2015
இடம் : கோரதீவு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
அ.சண்முகநாதன் (கணவர்)
கைப்பேசி : 077 476 6441