மரண அறிவித்தல்

திருமதி சற்குணதேவி முத்துலிங்கம் (இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர்- யாழ் வயாவிளான் மத்திய கல்லூரி)

தோற்றம்: 16 மே 1939   -   மறைவு: 13 பெப்ரவரி 2017

யாழ். உரும்பிராய் கிழக்கு பெற்றோல் நிலைய ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சற்குணதேவி முத்துலிங்கம் அவர்கள் 13-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சிவக்கொழுந்து தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் மருமகளும்,

முத்துலிங்கம் அவர்களின் மனைவியும்,

நவகாந்த், ஷாமிளா, மைதிலி ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, கமலேஸ்வரி, சிவபாதசுந்தரம், சிவலோகநாதன், சிவானந்தன், சாந்தி ஆகியோரின் சகோதரியும்,

முருகதர்ஷினி, குகநாதன், சிவமயூரன் ஆகியோரின் மாமியாரும்,

பஞ்சலிங்கம், காலஞ்சென்ற இராஜேந்திரம், ஜெயதேவி, சதாஜினி, சற்குணதேவி, காலஞ்சென்ற சிவபாக்கியம், தவமலர், பரமயோகன் ஆகியோரின் மைத்துனியும்,

கோமுகி, பிறவீனா, டிரோசன், சதுர்சன், ஹவிசன், ஜஸ்விகா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 16-02-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணி
இடம் : உரும்பிராய் இளங்காட்டு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
தொலைபேசி : +94776244910