மரண அறிவித்தல்

திருமதி சாந்தினி அருந்தவபாலன்

தோற்றம்: 1955.11.25   -   மறைவு: 2019.05.06

(ஓய்வுநிலை ஆசிரியை பளை மத்திய கல்லூரி, சாவகச்சேரி மகளிர் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி)

வேலாயுதம் விதி, நுணாவில் மத்தி சாவகச்சேரியைச் சேர்ந்த திருமதி சாந்தினி அருந்தவபாலன் நேற்று முன்தினம் (06.05.2019) திங்கட்கிழமை) இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லப்பா மகேசன் – ஞானபூங்கோதை தம்பதியினரின் மூத்த புதல்வியும், அருந்தவபாலன் (ஓய்வுநிலை அதிபர் – சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும், திருவதனி (அவுஸ்திரேலியா), தனஞ்செயன் (அவுஸ்திரேலியா), சித்தார்த்தன் (சிங்கப்பூர்), பார்த்தீபன் (விரிவுரையாளர், தொழில்நுட்ப பீடம் -யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், இரத்தினம் தேவானந்த் |(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியும், சிவனயா, சோபியா, சமந்தா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்ற தர்மபாலன் மற்றும் ஜெயபாலன் (பிரான்ஸ்), மாலினி (ஜேர்மனி), விக்னகுமார் (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும், குளோரியா, கேதீஸ்வரி, அன்ரன் அழகராசா, தாமராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் (10.05.2019) வெள்ளிக் கிழமை காலை 8 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

வேலாயுதம் வீதி,
நுணாவில் மத்தி, சாவகச்சேரி.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (10.05.2019) வெள்ளிக் கிழமை
இடம் : கண்ணாடிப்பிட்டி இந்து மயானம்
பார்வைக்கு
திகதி : 08.05.2019-10.05.2019
இடம் : வீட்டில்(வேலாயுதம் வீதி, நுணாவில் மத்தி, சாவகச்சேரி.)
தொடர்புகளுக்கு