மரண அறிவித்தல்
திருமதி சின்னத்தங்கம் பரமநாதன்
தெல்லிப்பழை,கொலங்கலட்டியைப் பிறப்பிடமாகவும் இல 42,பலாலி வீதி,உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தங்கம் பரமநாதன் (ஓய்வு பெற்ற செயலாளர் (கணிதம்) கல்வி வெளியீட்டுத் திணைக்களம் -கொழும்பு)நேற்று 26.11.2015 வியாழக்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மூத்த தம்பி -தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் ,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பரமநாதனின் (செயலாளர் ,சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான மக்கள் குழு) அன்பு மனைவியும் ,கலாநிதி தயாபரனின் (அமெரிக்கா),அன்புத் தாயும் ,விஜிதாவின் (அமெரிக்கா),அன்பு மாமியும் காலஞ்சென்ற தங்கமுத்து ,செல்லமுத்து மற்றும் பாக்கியலட்சுமி ,பாலசிங்கம் ,இராசமணி (நோர்வே),சிவசுப்ரமணியம் (லண்டன்),முருகையா ஆகியோரின் சகோதரியும் ,பத்மாதேவி ,நடேசன்,பத்மநாதன் (கதிர்) காலஞ்சென்ற கமலாதேவி (மீனா),பாலநாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
சுப்பிரமணியம் பரமநாதன்
இல -42 “காஞ்சி இல்லம்”
பலாலி வீதி ,உரும்பிராய்.