மரண அறிவித்தல்
திருமதி சிவகாமிப்பிள்ளை சதானந்தன் (சோதி அக்கா)
வரணி வடக்கை பிறப்பிடமாகவும், தனங்களப்பை வசிப்பிடமாகவும் தபாற்கந்தோர் வீதி, சாவகச் சேரியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவகாமிப்பிள்ளை சதானந்தன் நேற்று (13.02.2020) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் விசாகப்பெருமாள் சதானந்தன் முன்னாள் விவசாய சம்மேளனத் தலைவர் – தனங் களப்பு) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான இராசையா- செல்லம்மா தம்பதி களின் சிரேஷ்ட புதல்வியும் காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள் – விசாலாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற செல்வநாயகம். சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற சண்முகசுந்தரம், ஈஸ்வரி. இளம்பிரைநாதன்(நாச்சிமார் ரவல்ஸ் உரிமையாளர்) ஆகியோரின் அன்பு சகோதரியும் சிதம்பரப்பிள்ளை மங்கையற்கரசியின் அன்பு மைத்துனியும் கஜேந்திரன் (லண்டன்). இந்து மதி (கனடா), தயாபரன் (கனடா). விசாகேந்திரன் (கனடா) ஆகியோரின் மாமியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் தபாற்கந்தோர் வீதி, சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் இன்று (14.02.2020) வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக கண்ணாடிப்பிட்டி இந்துமயானத் திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
வி.சதானந்தன் (கணவன்)