மரண அறிவித்தல்
திருமதி சுப்பிரமணியம் சின்னத்தங்கம்
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் பாலிநகரை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சின்னத்தங்கம் அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
கமலினி(ஆசிரியை- மன்னார்), காலஞ்சென்ற கனகேஸ்வரன், கேதீஸ்வரன்(அதிபர்- மு/ கேப்பாப்புலவு), கலைமதி(அ.த.க பாடசாலை, நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, முத்தையா, சின்னத்துரை மற்றும் பாக்கியம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமிர்தலிங்கம், சுபாஷினி(ஆசிரியை- மு/கைவேலி கணேச வித்தியாலயம்), விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திகா, சரண்யா, அபிஷன், இஷானிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பாலிநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்