மரண அறிவித்தல்
திருமதி செபமாலை வரோணிக்கா (மரியம்மா)
யாழ். மானிப்பாய் கூளாவடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை வரோணிக்கா அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தேவசகாயம் செபமாலை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற பெனடிக்ற், பத்மாவதி, சுகுணா, சுகுமார், நந்திகா, லூடஸ், காலஞ்சென்றவர்களான பிரேம்குமார், சாந்தினி, வினோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும், அருளம்மா விக்ரோறியா அவர்களின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற யேசுரட்ணம், செபஸ்ரியன், செல்வி, தனபால், யேசுதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற வேலாயுதம், அருளப்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும், எலிசபேத், சாமிநாதர், செபஸ்ரியாம்பிள்ளை, எஸ்தாக்கி, அந்தோனிப்பிள்ளை, D.A பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும், தர்மினி சிவா, நிஷ றோய், தர்ஷனி ஜெகன், லக்ஷன் மர்லினியா, நிதர்சன் மம்தா, தரண், சுஜன், யோய் ஆகியோரின் அன்புப் பேத்தியும், எய்டன், கைலன், நிலா, திவ்யா, ஷேன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |