மரண அறிவித்தல்
திருமதி செல்லம்மா கந்தசாமி
யாழ்ப்பாணம் வட்டுவத்தையைப் பிறப்பிடமாகவும், நாவலடி, புலோலி மேற்கு, பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் இலக்கம் 75, தம்பசிட்டி வீதி, பருத்தித்துறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா கந்தசாமி 29.11.2015 ஞாயிறுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான தம்புடையார் இராமலிங்கம் – மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மு.பொ கந்தசாமியின் பாசமிகு மனைவியும்,
காலஞ் சென்றவர்களான சிவகுருநாதன், சரவணமுத்து, பொன்னம்மா, செல்லாச்சிப்பிள்ளை, பொன்னையா, சுப்பிரமணியம், இராசையா ஆகியோரின் சகோதரியும்,
காலஞ் சென்றவர்களான மகேஸ்வரி, இராஜேஸ்வரி மற்றும் குலவீரசிங்கம், செல்வநாயகம் (செல்வி), மங்களேஸ்வரி (ஜேர்மனி), செல்வராணி (UK), பரமேஸ்வரி, சிவபாலன் (சவுதி அரேபியா), கனகாம்பிகை, தெய்வநாயகி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ் சென்றவர்களான பாலசுப்பிரமணியம், இராஜரட்ணம், திருச்செல்வமூர்த்தி மற்றும் அசுபதி, ருக்மணி, ஸ்ரீஸ்கந்தா, ஆனந்தஆழ்வார், சகுந்தலா, நடராஜா, தங்கவேலாயுதம் ஆகியோரின் பாசமிகு மாமியும், மு.பொ வீரவாகுவின் மைத்துனியும்,
பொற்செல்வி, இளங்கோ, கைலாஷ், கவிதா, மஞ்சுளாதேவி, குணசீலன், பிறேமசீலன், வாசுதேவன், மயூரன், பிறேம்குமார், அசோக்குமார், சதீஷ்குமார், தர்ஷினி, அமுதா, செந்தூரன், அனுஷியா, கணேஷராம், அபிராமி, கௌதமன், மயூரன், நிரஞ்சனி, சாளினி, மதுநிலவன், சுஜித்தா, விஜித்தா, சரத், விநோத் ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 04.12.2015 வெள்ளிக்கிழமை மு.ப 9 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்துக்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : பிள்ளைகள்
காணிக்கந்தோர் முன்பாக
இல.75, தம்பசிட்டி வீதி ,
பருத்தித்துறை.
021 226 3487
077 667 9719