மரண அறிவித்தல்
திருமதி செல்லம் மாணிக்கவாசகர்
யாழ். கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம் மாணிக்கவாசகர் அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(தம்பு) அவர்களின் அன்பு மனைவியும், பத்மநாதன்(லண்டன்), மங்களதேவி, கோபிநாதன், விமலாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, வேலாயுதம், ரேவதி, இராசையா, கந்தசாமி, செல்வலட்சுமி, துரைசிங்கம், பாலச்சந்திரன், அருணகிரிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரோஜா(லண்டன்), கனகசூரியர், சந்திரகாந்தா, பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், சதீஸ்(லண்டன்), தீபனா(லண்டன்), விது(லண்டன்), மோகனவரன், குமரவரன், பார்த்தீபன்(கனடா), டல்ஷி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 06-01-2018 சனிக்கிழமை தொடக்கம் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை வரை பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 09:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |