மரண அறிவித்தல்

திருமதி ஞானேஸ்வரி சோமசுந்தரம் (ஞானக்கா)

தோற்றம்: 28.01.1928   -   மறைவு: 28.01.2017

 

யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் வாழ்ந்து சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் ஆசிரியராகவும் பின் அதிபராகவும் பணிபுரிந்த திருமதி ஞானேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் (28.01.2017) சனிக்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார் அமரர்கள் தம்பு – சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், அமரர் கே.கே சோமசுந்தரம் (முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர் & ஆங்கில விரிவுரையாளர் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை) அவர்களின் அன்பு மனைவியும் மைதிலி (முன்னாள் பிரதிப்பதிவாளர் கொழும்பு பல்கலைக்கழகம்), கிருஷ்ணானந்தி (உளவியலாளர் – நியூசிலாந்து), ஜெகப்பிரியன் (கணக்காளர்), சிவாநந்தி (வைத்தியர் தேசிய வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத்தாயாரும் தயாநிதி (முன்னாள் பொறியியலாளர், RDA ), இளங்கோ (பேராசிரியர் நியூசிலாந்து), மஞ்சுளா (ஆசிரியர், சைவ மங்கையர் கழகம்), இரகுபரன் (சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும், கவிதா, தேனுகா, பார்த்தீபன், இளம்பூரணன், யாழினி ஆகியோரின் அன்பு பேர்த்தியும் அமரர்களான இரத்தினசபாபதி, கமலாம்பிகை குமாரசாமி, மகேஸ்வரி மகாதேவா, இராஜேஸ்வரி கயிலாயநாதன், புவனேஸ்வரி வில்லவராயர் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30.01.2017 (மு.ப 9.00 மணி – பி.ப 6.00 மணி) , 31.01.2017 மு.ப 9.00 மணி – பி.ப 4.00 மணி) ஆகிய இரு தினங்களிலும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 31.01.2017 நாளை செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்துக்கு தகனக்கிரியைக்காக எடுத்து செல்லப்படும்.

இந்த தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இல.49-1/1 டட்லி சேனநாயக்க மாவத்தை,
தெஹிவளை

நிகழ்வுகள்
கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்
திகதி : 31.01.2017
இடம் :
தொடர்புகளுக்கு
ஜெகப்பிரியன்
கைப்பேசி : 0777403819