மரண அறிவித்தல்
திருமதி தவமணிதேவி நாகமுத்து
வவுனியா பெரியவிளாத்திக்குளம் ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், குருமன்காட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி நாகமுத்து அவர்கள் (30-10-2015) வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருவம்பலம், நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேந்திரன், நவகீதன், நந்தகுமார் (பிரான்ஸ்), நகுலேஸ்வரன் (பிரான்ஸ்), சிவமிதிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகராசா, நவமணிதேவி, தியாகராசா, சிவமணிதேவி, சசிகரன்(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்), தவேந்தினி, ஜெயசுதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அகிலா, சுபாஜினி, சுசித்திரா, சுதர்சனா, அருள்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வராணி, வேலுப்பிள்ளை, குணபாக்கியவதி, பாலசண்முகராசா, சிவமலர், அருந்துதி, விஜயகுமார், மேகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜரூபன், ஜஸ்மிதா, கர்ணிகா, கரிஜன், அபிலாஸ், அக்சயா, கம்சாணன், கஜனிக்கா, லதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கோவில் வீதி, குருமண்காடு என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்