மரண அறிவித்தல்
திருமதி தவமணி சிதம்பரப்பிள்ளை
யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பண்டாரி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், சிதம்பரப்பிள்ளை(இளைப்பாறிய பணியாளர் – Royal Razat Farm, ஓமான்) அவர்களின் பாசமிகு மனைவியும், அன்புக்கரசி, அஜந்தா, அஜந்தன், விஜயகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற கணக்காளர்), பரமேஸ்வரி(பிரான்ஸ்), திருஞானமூர்த்தி(பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவபுஸ்பராசா, இளங்கோவன், சுசித்வினி, ஜெனிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும், வினோஜ், ஆதித், அனுசன், யனுசன், அமிர்தன், அகரவன், ஆர்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |