மரண அறிவித்தல்
திருமதி துரைசிங்கம் சிவகாம்பிகை
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் சிவகாம்பிகை அவர்கள் 16-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
யமுனாதேவி(கனடா), பாலகுமார்(ஜேர்மனி), சிவகுமார்(கொழும்பு), கிருஸ்ணகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்கினேஸ்வரன், ஜசிந்தா, விஜயமலர், மீரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான புனிதவதி, தனபாலசிங்கம், பரராஜசிங்கம், மற்றும் பாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கோபால் மற்றும் சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜானன், அபினன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அரிஸ், ரிஷி, கனிந்திகா, அக்ஸ்சயா, அபிஷா, சபரிஸ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.