மரண அறிவித்தல்
திருமதி துரைராஜா கமலம்மா (கமலம்)
8 ஆம் வட்டாரம் மண்டை தீவு தெற்கை பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா கமலம்மா (கமலம்) நேற்று (22.10.2015) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் துரைராஜாவின் (சங்கரத்தை) அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை- உமையாத்தை தம்பதியரின் பாசமிகு மகளும் ஜெயந்தனின் (லண்டன்) அன்புத் தாயாரும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை பூமலர், சிவநாதபிள்ளை மற்றும் திருஞானசம்பந்தபிள்ளை (லண்டன்) ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா -செல்லம்மா தம்பதியரின் மருமகளும், ரஜிதாவின் மாமியாரும், பிரகஷ்ததியின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
காலஞ்சென்ற தங்கதுரை, குருசாமி, தவமணி, சிவபாக்கியம் (லண்டன்), மணி, சர்வேந்திரன் ,காலஞ்சென்ற கலையரசி, மீனலோஜினி, (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (23.10.2015) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் மதியம் 12 மணியளவில் நடைபெற்று பூதவுடல் 1.30 மணியளவில் தகனக் கிரியைக்காக காக்கை தீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்